/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா
/
நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா
நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா
நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா
ADDED : ஆக 31, 2025 07:31 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, அரசம்பாளையம் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா வரும், 4ம் தேதி நடக்கிறது.
கிணத்துக்கடவு, அரசம்பாளையம் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா, வரும், 3ம் தேதி துவங்குகிறது. அன்று காலையில், திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, அனுமதி பெறுதல், மண்ணெடுத்தல், காப்பணிதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இரவு, 7:00 மணிக்கு, முதற்கால வேள்வி நடக்கிறது. இரவு, 8:30 மணிக்கு, வேள்வி நிறைவு, பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது. இரவு, 9:00 மணிக்கு, எண்வகை மருந்து சாற்றுதல் மற்றும் விமான கலசம் நிறுவப்படுகிறது.
வரும், 4ம் தேதி, காலை, 6:00 மணிக்கு, திருச்சுற்று தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது. காலை, 7:00 மணிக்கு, இரண்டாம் கால வேள்வி நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு, விமான கலசங்களுக்கும், காலை, 10:15 மணிக்கு, மூலமூர்த்திகளுக்கும் திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு, அன்னதானம் நடக்கிறது.