/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நெட்ஒர்க்' பிரச்னையால் பணம் செலுத்த முடியல! அரசு பஸ்களில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்
/
'நெட்ஒர்க்' பிரச்னையால் பணம் செலுத்த முடியல! அரசு பஸ்களில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்
'நெட்ஒர்க்' பிரச்னையால் பணம் செலுத்த முடியல! அரசு பஸ்களில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்
'நெட்ஒர்க்' பிரச்னையால் பணம் செலுத்த முடியல! அரசு பஸ்களில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்
ADDED : ஆக 31, 2025 07:30 PM

வால்பாறை; 'நெட் ஒர்க்' பிரச்னையால் அரசு பஸ்களில் ஜி.பே., வாயிலாக பணம் செலுத்தி டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில், பொள்ளாச்சி, பழநி, கோவை, சேலம், மன்னார்காடு, திருப்பூர் ஆகிய வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதே போல் பொள்ளாச்சி கோட்டத்திலிருந்தும் வால்பாறைக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், அரசு பஸ்களில் பயணியர் ஜி.பே., வாயிலாக பணம் செலுத்தி டிக்கெட் பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், வால்பாறை நகரிலிருந்து ஆழியாறு செல்லும் வரை 'நெட் ஒர்க்' பிரச்னையால், டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பயணியர் கூறியதாவது:
வால்பாறையிலிருந்து ரொட்டிக்கடை, அய்யர்பாடி, வாட்டர்பால், அட்டகட்டி வழியாக பொள்ளாச்சிக்கு பஸ் இயக்கப்படுகிறது. ஆனால், இடைப்பட்ட எஸ்டேட் பகுதியிலிருந்து பஸ்சில் பயணம் செய்யும் பயணியர் 'நெட்ஒர்க்' பிரச்னையால், ஜி.பே., வாயிலாக பணம் செலுத்தி டிக்கட் பெற முடியாமல் தவிக்கின்றனர். 'நெட் ஒர்க்' பிரச்னைக்கு தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு, கூறினர்.
அரசு பஸ் கண்டக்டர்கள் கூறியதாவது: பொள்ளாச்சி, கோவை போன்ற வெளியூரிலிருந்து வால்பாறைக்கு பயணம் செய்யும் பயணியர், ஜி.பே., வாயிலாக பணம் செலுத்தி டிக்கெட் பெறுகின்றனர். ஆழியாறிலிருந்து வால்பாறை வரை, 'நெட் ஒர்க்' பிரச்சனையால் பயணியர் பணம் செலுத்த முடிவதில்லை. எஸ்டேட் பகுதியிலிருந்து வால்பாறை நகர் வரும் வரையிலும் இதே போன்று பிரச்னை உள்ளது.
வால்பாறை நகரிலிருந்து வெளியூர் செல்லும் பயணியரிடம், பஸ் ஸ்டாண்டிலேயே ஜி.பே., வாயிலாக பணம் பெற்று, முன் கூட்டியே டிக்கெட்களை வழங்குகிறோம். இவ்வாறு, கூறினர்.