/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்டேஷனரி கடைக்காரர் போக்சோவில் கைது
/
ஸ்டேஷனரி கடைக்காரர் போக்சோவில் கைது
ADDED : நவ 05, 2025 10:12 PM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே பங்களா மேடு பகுதியை சேர்ந்தவர் விஜய்குமார், 70. ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார். மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி, இவரது கடைக்கு பேனா, நோட்டு உள்ளிட்டவைகளை வாங்க வந்துள்ளார். அப்போது, அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக மாணவி பெற்றோரிடமும், பள்ளி ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் நல அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அம்மாணவியிடம் விசாரணை செய்யப்பட்டது.
மேலும் கடைக்காரர் விஜய்குமாரிடமும் நடத்திய விசாரணையில், அவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது. மேட்டுப் பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் போக்சோ வழக்கு பதியப்பட்டு, விஜய்குமார் கைது செய்யப்பட்டார்.

