/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனி ஒருவருக்காக பத்திரப்பதிவுக்கு தடை விதிப்பதா : உடனடியாக விலக்க குடியிருப்போர் சங்கத்தினர் மனு

ADDED : நவ 05, 2025 10:57 PM
கோவை: விளாங்குறிச்சி உதயா நகர் மனைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கி பத்திரப்பதிவு செய்ய வழிவகை செய்யுமாறு, மாநராட்சி கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
விளாங்குறிச்சி உதயா நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் அளித்த மனு:
உதயா நகரானது, கோவை உள்ளூர் திட்ட குழுமம் அங்கீகாரம் பெற்று, 22.20 ஏக்கர் பரப்பளவில், 304 மனைகள் மற்றும் பூங்கா, விளையாட்டு திடல், சமுதாயக்கூடம் உள்ளிட்டவை அடங்கிய விளாங்குறிச்சி கிராமத்துக்கு உட்பட்டது.
இங்கு மனை இடம் ஒன்றில், முரண் இருப்பதாக அறிந்து, தாங்கள், 304 மனைகளுக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளீர்கள்.
இதில் பூங்கா அருகே தென்புற பகுதியில் உள்ள, 9 சைட்களை சேர்த்து, 30 ஆண்டுகளுக்கும் மேல் குடியிருப்பவர்களுக்கு தெரியாமல், முன்னறிவிப்பின்றி மாநகராட்சி பெயரில் 'சப் டிவிஷன்' செய்யப்பட்டுள்ளது.
தடை உத்தரவு காரணமாக, கல்வி கடன் உள்ளிட்ட தேவைகளுக்கு இடத்தை அடமானம் வைத்தல், தனி பட்டா மாறுதல் போன்றவற்றுக்கு, கணபதி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யமுடியவில்லை.
கிழக்கு மண்டல நில அளவையர் உள்ளிட்ட அதிகாரிகள் கள நிலவரத்தை ஆராய்ந்தும், தீர்வு கிடைக்கவில்லை. 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 30 ஆண்டுக்கும் மேலாக இங்கு குடியிருந்து வருகிறோம்.
எனவே, நீங்கள் பிறப்பித்த தடை உத்தரவை ரத்து செய்யவும், மாநகராட்சி பெயரில் சப் டிவிஷன் செய்யப்பட்டதை நீக்கவும் வேண்டும்.
தனிப்பட்ட ஒருவருக்காக, எங்கள் நகர் முழுவதுக்கும் விதித்த தடையை விலக்கி பத்திரப்பதிவு, பட்டா மாறுதல் செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.