/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்
/
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்
ADDED : டிச 24, 2025 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகள் முகாம் நடந்தது. மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா தலைமை வகித்தார். அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் கார்த்திகேயன், நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் நடராஜ், நகராட்சி நியமன கவுன்சிலர் முருகானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாற்றுத்திறனாளிகள் டிஜிட்டல் கார்டு பெறுவதற்காக 'ஆன்லைனில்' விண்ணப்பித்தவர்களுக்கு சிறப்பு டாக்டர்கள் பரிசோதனை செய்து சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான மருத்துவ சான்று வழங்கப்பட்டது.

