/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பைக் பெட்ரோல் டேங்கில் மறைத்து கடத்திய ரூ.56.50 லட்சம் பறிமுதல்
/
பைக் பெட்ரோல் டேங்கில் மறைத்து கடத்திய ரூ.56.50 லட்சம் பறிமுதல்
பைக் பெட்ரோல் டேங்கில் மறைத்து கடத்திய ரூ.56.50 லட்சம் பறிமுதல்
பைக் பெட்ரோல் டேங்கில் மறைத்து கடத்திய ரூ.56.50 லட்சம் பறிமுதல்
ADDED : டிச 24, 2025 06:44 AM

போத்தனுார்: கோவையில், பைக் பெட்ரோல் டேங்கில் மறைத்து, ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட, 56.50 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை, க.க.சாவடி போலீஸ் எல்லைக்குட்பட்ட வேலந்தாவளம் சோதனை சாவடியில், நேற்று காலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அவ்வழியே, கேரளா நோக்கி பைக்கில் வந்த ஒருவர், போலீசாரை கண்டதும், பைக்கை திருப்பி வேறு வழியில் சென்றார்.
போலீசார் அந்த பைக்கை துரத்திச் சென்று அப்பாச்சிகவுண்டன்பதியில் மடக்கினர்.
விசாரணையில், அவர், கேரள மாநிலம், மலப்புரம், பெருந்தல்மன்னா பகுதியை சேர்ந்த சபீக், 38, என, தெரிந்தது. மேலும், அவரது பைக் சீட்டின் அடியில் மற்றும் பெட்ரோல் டேங்கில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரிந்தது. அவரை, போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
ரொக்கத்தை வெளியே எடுத்து எண்ணியபோது, 56.50 லட்சம் ரூபாய் இருப்பது தெரிந்தது. இத்தொகை பழைய தங்க நகைகளை விற்ற வகையில் வந்ததும் தெரிய வந்தது. ரொக்கத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், வருமான வரித்துறையினரிடம், ரொக்கம், பைக்குடன் சபீக் ஒப்படைக்கப்பட்டார்.