/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் குறைதீர் கூட்டத்தில் தீர்வு
/
ரேஷன் குறைதீர் கூட்டத்தில் தீர்வு
ADDED : ஜூலை 14, 2025 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை மாவட்டத்திலுள்ள, அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகங்களில், ரேஷன் சிறப்பு குறை தீர்ப்புக் கூட்டம் நடந்தது.
இதில் ரேஷன் கார்டில் பெயர், சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், ரேஷன்கார்டு நகல் பெறுதல், மொபைல் எண் மாற்றுதல், குடும்பத்தலைவர் போட்டோ மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு குறைகளை சரி செய்யக்கோரி, 300க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் புகார் மனுக்கள் கொடுத்து இருந்தனர். 261 மனுக்களின் குறைகள் சரி செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டன.

