/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்ணீர் தொட்டி அகற்றம்; பொதுமக்கள் அதிருப்தி
/
தண்ணீர் தொட்டி அகற்றம்; பொதுமக்கள் அதிருப்தி
ADDED : அக் 24, 2025 11:55 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, ஆர்.எஸ். ரோட்டில் இருந்த தண்ணீர் தொட்டியை அகற்றம் செய்ததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு, ஆர்.எஸ். ரோட்டில் சொலவம்பாளையம் இணைப்பு சாலை எதிரில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. அதன் அருகே டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த தண்ணீர் தொட்டியை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால், கடந்த இரு தினங்களுக்கு முன் தண்ணீர் தொட்டி திடீரென அகற்றம் செய்யப்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'டிரான்ஸ்பார்மர் அருகே தண்ணீர் தொட்டி இருப்பதால் அகற்றம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் மாற்றிடம் தேர்வு செய்து தண்ணீர் தொட்டி அமைக்கப்படும்,' என்றனர்.
மக்கள் கூறுகையில், 'இங்கு இருந்த தண்ணீர் தொட்டியில் பல ஆண்டுகளாக தண்ணீர் பிடித்து வருகிறோம். திடீரென இடித்து அகற்றப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் நலன் கருதி மீண்டும் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும்,' என்றனர்.

