/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறிச்சி பஸ் ஸ்டாப் அருகாமையில் வாகன ஓட்டிகளை மிரட்டும் குழிகள்
/
குறிச்சி பஸ் ஸ்டாப் அருகாமையில் வாகன ஓட்டிகளை மிரட்டும் குழிகள்
குறிச்சி பஸ் ஸ்டாப் அருகாமையில் வாகன ஓட்டிகளை மிரட்டும் குழிகள்
குறிச்சி பஸ் ஸ்டாப் அருகாமையில் வாகன ஓட்டிகளை மிரட்டும் குழிகள்
ADDED : டிச 24, 2025 05:13 AM

கோவை: சுந்தராபுரம் சந்திப்பில் இருந்து பொள்ளாச்சி ரோடு, மதுக்கரை மார்க்கெட் ரோடு மற்றும் போத்தனுார் சாரதா மில் ரோட்டில் இருந்து, ஆத்துப்பாலம் நோக்கி வரும் வாகன ஓட்டிகள், குறிச்சி குளக்கரை வழியாகவே, கடந்து செல்ல வேண்டும்.
குறிச்சி பஸ் ஸ்டாப் பகுதியில், ஆரம்பப் பள்ளி செயல்படுகிறது. வளைவு பகுதியாக இருப்பதாலும், ரோட்டை கடந்து மாணவர்கள் செல்ல வேண்டும் என்பதற்காகவும், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, வேகத்தடை அமைக்கப்பட்டிருக்கிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, இந்த ரோட்டின் பராமரிப்பு மோசமாக இருக்கிறது. வேகத்தடை அருகே ரோட்டில் ஆங்காங்கே குழிகள் காணப்படுகின்றன. வேகத்தடையில் இருந்து ஏறி இறங்கியதும், குழியை வாகன ஓட்டிகள் கவனிக்கத் தவறினால் விபத்தை சந்திக்க நேரிடும். ஒரே பகுதியில் அடுத்தடுத்து ஐந்து இடங்களில் குழிகள் இருக்கின்றன. தார் ரோடு விலகி, பள்ளம் உருவாகியிருக்கிறது.
குடும்பத்தோடு இரு சக்கர வாகனங்களில் வருவோர், குழிக்குள் இறங்கி ஏறும் போது தடுமாறி விழுகின்றனர். விபத்துகளை தவிர்க்கவும், உயிர் பலி தடுக்கவும் அப்பகுதியில், நெடுஞ்சாலை ஆணையம் விரைந்து, 'பேட்ச் ஒர்க்' செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

