/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
40 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்
/
40 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்
40 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்
40 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்
ADDED : டிச 23, 2025 05:16 AM

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா சுவாமி சிவானந்த மேல்நிலைப் பள்ளியில், 1985ம் ஆண்டு, 10ம் வகுப்பு படித்த மாணவ, மாணவியர், 40 ஆண்டுகளுக்கு பிறகு பெரியநாயக்கன்பாளையத்தில் சந்தித்து தங்கள் மலரும் நினைவுகளை பரிமாறிக் கொண்டனர்.
கலாநிலைய நடுநிலைப்பள்ளியில், 1ம் வகுப்பில் இருந்து, சுவாமி சிவானந்தா மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு வரை படித்த மாணவ, மாணவியர் சந்திப்பு நிகழ்வு, பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
முன்னாள் மாணவர் ராஜா வரவேற்றார். நாகராஜன் தலைமை வகித்தார். 25க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் சந்தித்து, தங்களது பள்ளி கால மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். வரும் காலங்களில் இந்த சந்திப்பு நிகழ்வுக்கு வராமல் இருக்கும், 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவியரை சந்தித்து, அவர்களையும் குழுவில் இணைத்து, பல்வேறு நல பணிகளை மேற்கொள்வது என்றும், இன்னொரு சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, அதில் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் கலந்து கொள்ள செய்வது என்றும், முடிவு செய்யப்பட்டது.

