/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மார்க்கெட்டுக்கு மீன் வரத்து சரிவு; விலை உயர்வதற்கு வாய்ப்பு
/
மார்க்கெட்டுக்கு மீன் வரத்து சரிவு; விலை உயர்வதற்கு வாய்ப்பு
மார்க்கெட்டுக்கு மீன் வரத்து சரிவு; விலை உயர்வதற்கு வாய்ப்பு
மார்க்கெட்டுக்கு மீன் வரத்து சரிவு; விலை உயர்வதற்கு வாய்ப்பு
ADDED : ஆக 21, 2025 08:29 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகருக்கான மீன்வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி மீன் மார்க்கெட்டிற்கு, துாத்துக்குடி, ராமேஸ்வரம் பகுதிகளில் இருந்து, கடல் மீன்கள் தருவிக்கப்படுகின்றன. அவ்வகையில், நாளொன்றுக்கு, 1.5 டன் வரை மீன்கள் வரத்து உள்ளது. அதேநேரம், கடந்த ஏப்., 15 முதல் ஜூன் 14ம் தேதி வரை மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்பட்ட நிலையில், மீன் வரத்து குறைந்தது.
இதனால், அக்காலகட்டத்தில், கிலோவுக்கு 120 முதல் 300 ரூபாய் வரை கூடுதலாக மீன்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், துாத்துக்குடி கடல் பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலை, மீனவர்களுக்கு ஏற்றதாக இல்லாததால், குறைந்த அளவிலான மீன்களே கிடைப்பதால், தற்போதும் வரத்து குறைந்துள்ளது.
மீன் வியாபாரிகள் கூறியதாவது:
துாத்துக்குடி கடல் பகுதியில் புயல் காரணமாக, மீன்கள் பிடிக்கப்படுவதில்லை. அதேபோல, ராமேஸ்வரம் கடல்பகுதியில் இலங்கை கடற்படையினர் பிரச்னை காரணமாக, மீன்கள் பிடிக்க மீனவர்கள் செல்வது கிடையாது.
மேலும், கேரளாவில், மத்தி மீன்கள் வாயிலாக எண்ணெய் தயாரிக்கப்படுவதால் அதன் விலை கிலோ, 300 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு மீன் வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. வரும் நாட்களில், தற்போதைய விலையை விட உயர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு, கூறினார்.

