/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்துஸ்தான் சர்வதேச பள்ளியில் 11வது விளையாட்டு விழா
/
இந்துஸ்தான் சர்வதேச பள்ளியில் 11வது விளையாட்டு விழா
இந்துஸ்தான் சர்வதேச பள்ளியில் 11வது விளையாட்டு விழா
இந்துஸ்தான் சர்வதேச பள்ளியில் 11வது விளையாட்டு விழா
ADDED : டிச 24, 2025 05:15 AM

கோவை: நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் சர்வதேசப் பள்ளியில், 11வது விளையாட்டு விழா விமர்சையாக நடந்தது. தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அதிகாரி நந்தகுமார், போட்டிகளை துவக்கி வைத்தார்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்கள், பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். தனிநபர் சாம்பியன் பட்டத்தை மாணவர் பிரிவில் ஏழாம் வகுப்பு மாணவர் இலன்வாக் 26 வெற்றி புள்ளிகளுடனும், மாணவியர் பிரிவில் ஏழாம் வகுப்பு மாணவி சாய்ஜெய்னி 19 வெற்றிப் புள்ளிகளுடனும் தனிநபர் சாம்பியன் பட்டத்தைப் பெற்றனர்.
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை, 1,021 வெற்றி புள்ளிகள் பெற்று சிவப்பு அணி தட்டிச் சென்றது. இரண்டாமிடத்தை 979 வெற்றிப் புள்ளிகள் பெற்று பச்சை அணியினர் வென்றனர். பெற்றோர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தி சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரசுவதி, செயலாளர் பிரியா, நிர்வாக இயக்குனர் சதீஷ்பிரபு, அறங்கவலர் யமுனா, முதல்வர் சுஜாநாயர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.

