/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஈரோட்டில் நானும் வேட்பாளர்தான்! கூட்டத்தில் உதயநிதி 'டுவிஸ்ட்'
/
ஈரோட்டில் நானும் வேட்பாளர்தான்! கூட்டத்தில் உதயநிதி 'டுவிஸ்ட்'
ஈரோட்டில் நானும் வேட்பாளர்தான்! கூட்டத்தில் உதயநிதி 'டுவிஸ்ட்'
ஈரோட்டில் நானும் வேட்பாளர்தான்! கூட்டத்தில் உதயநிதி 'டுவிஸ்ட்'
ADDED : ஏப் 17, 2024 12:45 AM
ஈரோடு தொகுதி தாராபுரத்தில் அமைச்சர் உதயநிதி, ''இங்கு வேட்பாளராக நிற்பது பிரகாஷ் கிடையாது. நான் தான் வேட்பாளராக நிற்கிறேன்,'' என, வாக்காளர்களிடம் ஓட்டு கேட்டார்.
ஈரோடு தொகுதி வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து தாராபுரத்தில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது:
மூன்று லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வேட்பாளர் பிரகாஷை வெற்றி பெற வைக்க வேண்டும். இங்கு வேட்பாளராக நிற்பது பிரகாஷ் கிடையாது. நான் தான் வேட்பாளராக நிற்கிறேன். என்னை ஏமாற்றிட மாட்டீங்களே.
நான் மற்ற தொகுதிகளில் எல்லாம், கருணாநிதி, ஸ்டாலின் தான் வேட்பாளர் என்று சொல்வேன். மாநில இளைஞரணி துணை செயலாளராக பிரகாஷ் உள்ளார். அந்த உரிமையில் கேட்கிறேன். பிரகாஷ் தான்வேட்பாளர்.
பிரகாஷின் மறு உருவமாக, நானும் வேட்பாளர் தான். எனக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு போடுங்க. 'பேலட் மெஷினில்,' சென்று எனது பெயரை தேடிட்டு இருக்காதீங்க. அவருக்கு சார்பாக, நான் ஓட்டு கேட்கிறேன்.
இவ்வாறு, அவர் பேசினார்.
பிரசாரத்தின் போது, இலவச பஸ் பயணத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்னை குறித்தும், மகளிர் உரிமை தொகை, பஸ் ஸ்டாப் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து தொண்டர்கள் பேசினர். அவையெல்லாம் தேர்தலுக்கு பின் களையப்படும் என்று நாசூக்காக பதில் அளித்து, தொடர்ந்து பேச ஆரம்பித்து விட்டார்.

