/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓய்வூதிய திட்டங்கள் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்த தமிழக அரசு முடிவு
/
ஓய்வூதிய திட்டங்கள் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்த தமிழக அரசு முடிவு
ஓய்வூதிய திட்டங்கள் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்த தமிழக அரசு முடிவு
ஓய்வூதிய திட்டங்கள் குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்த தமிழக அரசு முடிவு
ADDED : ஆக 12, 2025 11:38 AM
சென்னை: ஓய்வூதிய திட்டங்கள் குறித்து நான்கு கட்டங்களாக, அரசு ஊழியர்கள் சங்கங்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என, 2021 சட்டசபை தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டது; ஆனாலும், அதை நிறைவேற்றவில்லை.
இந்நிலையில், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதை தமிழகத்திலும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக, சட்டசபையில் நிதி அமைச்சர் சூசகமாக அறிவித்தார். இதற்கு, அரசு ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன; போராட்டங்களும் நடத்தின.
இதையடுத்து, ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கு, ஊரக வளர்ச்சி துறை செயலர் தலைமையிலான குழுவை தமிழக அரசு நியமித்தது.
ஆட்சிக் காலம் முடியவுள்ள நிலையில், வாக்குறுதி அளித்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாமல், ஆராய்வதற்கு குழு அமைத்ததற்கும் எதிர்ப்பு கிளம்பியது. அதனால், குழுவின் செயல்பாடு ஆறு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த குழு அறிக்கை தாக்கல் செய்வதற்கு, செப்டம்பர் வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. அதற்கு இன்னும், 50க்கும் குறைவான நாட்களே உள்ளதால், ஓய்வூதிய திட்டங்கள் குறித்து அரசு ஊழியர்கள் சங்கங்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த, குழு முடிவெடுத்துள்ளது.
தலைமை செயலகத்தில், வரும் 18 மற்றும் 25ம் தேதி, செப்டம்பர் 1 மற்றும் 8ம் தேதிகளில், நான்கு கட்டடங்களாக இந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
இதில், 40 அரசு ஊழியர் சங்கங்கள் பங்கேற்க உள்ளன. ஒவ்வொரு சங்கத்தில் இருந்தும் இரண்டு பிரதிநிதிகள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் விபரங்களை முன்கூட்டியே அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.