/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
14, 15ம் தேதி ' ட்ரோன் ' பறக்க தடை
/
14, 15ம் தேதி ' ட்ரோன் ' பறக்க தடை
ADDED : ஆக 13, 2025 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில், 14 மற்றும் 15ம் தேதி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நாட்டின் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பாதுகாப்பு நடவடிக்கையாக, 14 மற்றும் 15ம் தேதிகளில், தலைமைச் செயலகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், முதல்வர் இல்லத்திலிருந்து தலைமைச் செயலகம் வரையில் செல்லும் வழித்தடங்கள், சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அப்பகுதியில், ட்ரோன்கள், ரிமோட் வாயிலாக இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏர்கிராப்ட் பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹாட் ஏர் பலுான்கள் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது.