/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிணற்றில் விழுந்த முதியவர் மீட்பு
/
கிணற்றில் விழுந்த முதியவர் மீட்பு
ADDED : அக் 24, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணற்றில் விழுந்த முதியவர் மீட்பு
ஆவடி: ஆவடி அடுத்த லாசர் நகரைச் சேர்ந்தவர் ராஜு, 65; ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் மகன் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அதே வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
நேற்று மாலை வீட்டில் உள்ள 100 அடி ஆழம் கொண்ட கிணறு அருகே நின்றிருந்த போது, தவறி உள்ளே விழுந்தார். தகவலறிந்து வந்த ஆவடி தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டனர். ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.

