தொலைநோக்கு பார்வைகளை தெளிவாக காட்டும் பிரதமரின் உரைகள்; புத்தகத்தை வெளியிட்டு அமைச்சர் பெருமிதம்
தொலைநோக்கு பார்வைகளை தெளிவாக காட்டும் பிரதமரின் உரைகள்; புத்தகத்தை வெளியிட்டு அமைச்சர் பெருமிதம்
UPDATED : ஜன 05, 2026 05:36 PM
ADDED : ஜன 05, 2026 03:30 PM

புதுடில்லி: பிரதமர் மோடியின் சுதந்திர தின உரைகள் அவரின் தொலைநோக்கு பார்வைகளை தெளிவாக காட்டுகின்றன என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதத்துடன் கூறி உள்ளார்.
தலைநகர் டில்லியில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய உருது மொழி மேம்பாட்டுக் கழகத்தால் வெளியிடப்பட்ட பிரதமர் மோடி குறித்த ஒரு புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தகம், 2004ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான பிரதமர் மோடியின் சுதந்திர தின உரைகளின் தொகுப்பாகும்.
இந்த புத்தகத்தை வெளியிட்ட பின்னர் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது;
பிரதமர் மோடியின் உரைகள் தேசத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையைத் தெளிவாகக் காட்டுகின்றன. இந்த உரைகள், அனைவருடனும், அனைவரின் வளர்ச்சிக்கும், அனைவரின் முயற்சிக்கும்' என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டு அவர் செயல்படும் விதத்தை ஆவணப்படுத்துகின்றன.
இவ்வாறு அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

