/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீசாரை பார்த்து தப்பியோடிய இருவரிடம் ரூ .80 லட்சம் பறிமுதல்
/
போலீசாரை பார்த்து தப்பியோடிய இருவரிடம் ரூ .80 லட்சம் பறிமுதல்
போலீசாரை பார்த்து தப்பியோடிய இருவரிடம் ரூ .80 லட்சம் பறிமுதல்
போலீசாரை பார்த்து தப்பியோடிய இருவரிடம் ரூ .80 லட்சம் பறிமுதல்
ADDED : செப் 17, 2025 03:07 AM
அண்ணா நகர், போலீசாரை பார்த்து தப்பியோடிய இருவரிடம், 80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
மணிமங்கலம் போலீஸ்கரர்கள் வேல்முருகன், முனியன் இருவரும், நேற்று காலை, திருட்டு வழக்கு தொடர்பாக, அமைந்தகரை அடுத்த செனாய் நகர், எட்டாவது தெருவில், விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
போலீசை பார்த்தவுடன், சாலையோரம் நின்ற இருவர் தப்பியோடினர். போலீசார் இருவரையும் விரட்டிப் பிடித்தனர்.
அவர்களை சோதித்தில் , முறையாக ஆவணங்களின்றி, 80 லட்சம் ரூபாய் பணம் வைத்திருந்தது தெரிய வந்தது. முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தால் , இருவரையும் அண்ணா நகர் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் தினேஷ் , மகேஷ் குமார் என்பது தெரிந்தது. முறையாக ஆவணங்கள் இல்லாததால், வருமான வரிதுறை அதிகாரிகளிடம் பணத்தை ஒப்படைத்தனர்.
பின், வருமான வரித்துறையிடம் ஆவணங்களை ஒப்படைத்து, இருவரும் பணத்தை திரும்ப பெற்றதாக கூறப்படுகிறது .
***