/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரேஷனில் நகை விற்க கோரி வேளச்சேரியில் ஆர்ப்பாட்டம்
/
ரேஷனில் நகை விற்க கோரி வேளச்சேரியில் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 27, 2025 03:01 AM

வேளச்சேரி: தங்கம் விலை ஏற்றத்தால், ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், ரேஷன் கடைகளில் தங்க நகை விற்பனை செய்ய வேண்டும் என, நேற்று வேளச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ரேஷன் கடைகள், கூட்டுறவு வங்கி வாயிலாக தங்க நகை விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக ஏழை எளியோர், நடுத்தர மக்கள் நலச்சங்கம் சார்பில், நேற்று வேளச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இது குறித்து, அச்சங்கத் தலைவர் லிங்கப்பெருமாள் கூறியதாவது:
தங்கத்தின் விலை ஒரு லட்சத்தை நெருங்கியதால், ஏழை, நடுத்தர மக்கள் நகை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், மானிய விலையில், ரேஷன் கடைகள், கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, ஏழை, நடுத்தர மக்களுக்கு மட்டும் தங்க நகை விற்பனை செய்ய வேண்டும். அதுவும் செய்கூலி, சேதாரம், ஜி.எஸ்.டி., இல்லாமல் விற்பனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

