/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவேற்காடில் 4 மணி நேரம் மின் இணைப்பு துண்டிப்பு
/
திருவேற்காடில் 4 மணி நேரம் மின் இணைப்பு துண்டிப்பு
திருவேற்காடில் 4 மணி நேரம் மின் இணைப்பு துண்டிப்பு
திருவேற்காடில் 4 மணி நேரம் மின் இணைப்பு துண்டிப்பு
ADDED : செப் 18, 2025 12:41 AM
திருவேற்காடு, திருவேற்காடு நகராட்சியில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பல்லவன் நகர், எம்.ஜி.ஆர் நகர், வள்ளிகொள்ளைமேடு, அர்ஜுனமேடு உட்பட பல்வேறு பகுதிகளில், நேற்று, ஐந்து முறைக்கும் மேல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
குறிப்பாக, நேற்று மாலை 4:00 மணி முதல் 8:30 மணி வரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. முன் அறிவிப்பின்றி பல மணி நேரங்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், கர்ப்பிணியர், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
திருவேற்காட்டில் தினமும் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. இது குறித்து புகார் அளிக்க தொடர்பு கொள்ள முயற்சிக்கும்போது, மின்வாரிய அதிகாரிகள் மொபைல்போன் அழைப்புகளை எடுப்பதில்லை.
அதேபோல், சேதமடைந்த மற்றும் பழுதான மின்மாற்றி மற்றும் மின்கம்பங்களை, மீண்டும் மீண்டும் சீர் செய்து பயன்படுத்துவதால், அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. இப்பிரச்னைக்கு மின் வாரிய அதிகாரிகள், நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.