/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொசுவர்த்தியால் குடிசை தீக்கிரை: முதியவர் பலி
/
கொசுவர்த்தியால் குடிசை தீக்கிரை: முதியவர் பலி
ADDED : ஆக 12, 2025 12:40 AM
தாம்பரம், தாம்பரத்தில், கொசுவர்த்தியில் இருந்து தீ பரவி, குடிசை வீடு பற்றி எரிந்ததில் முதியவர் பலியானார்.
மேற்கு தாம்பரம், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன், 75; கூலித்தொழிலாளி. மனைவி குப்பம்மாளுடன், 63, குடிசை வீட்டில் வசித்து வந்தார்.
காசநோயால் பாதிக்கப்பட்ட சீனிவாசன், வீட்டிலேயே படுத்த படுக்கையாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை குப்பம்மாள், கணவருக்கு உணவு கொடுத்துவிட்டு, அவர் படுத்திருந்த மரக்கட்டில் பகுதியில் சுருள் கொசுவர்த்தியை ஏற்றிவைத்து விட்டு, அருகே உள்ள மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில், வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடம் சென்று பார்த்தபோது, மரக்கட்டிலில் படுத்திருந்த சீனிவாசன், தீயில் உடல் கருகி இறந்தது தெரியவந்தது. கொசுவர்த்தியில் இருந்து தீ பரவி விபத்து ஏற்பட்டதும் விசாரணையில் தெரிந்தது. தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.