/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணை தாக்கி பணம் பறித்த 5 ரவுடிகள் கைது
/
பெண்ணை தாக்கி பணம் பறித்த 5 ரவுடிகள் கைது
ADDED : ஆக 12, 2025 12:40 AM
காசிமேடு, பெண்ணை தாக்கி பணம் பறித்த ஐந்து ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
காசிமேடைச் சேர்ந்த 44 வயது பெண். இவர் கடந்த 9ம் தேதி, காசிமேடு, பவர்குப்பம் சுரங்கப்பாதை அருகே நடந்து சென்றபோது, அங்கு வந்த ஐந்து பேர், பெண்ணிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளனர்.
பணம் தர மறுத்ததால், பெண்ணை தாக்கி, அரிவாளை காட்டி மிரட்டி, 500 ரூபாயை பறித்து தப்பினர்.
இதுகுறித்து, காசிமேடு போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
விசாரணையில், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளான, காசிமேடைச் சேர்ந்த அஸ்வின்குமார், 24, தினேஷ், 21, ராயபுரத்தைச் சேர்ந்த புகழேந்தி, 25, ஜெயசூர்யா, 22, முகேஷ், 26, ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.