/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'கிரெடாய் சென்னை பேர்புரோ' கண்காட்சி துவக்கம் புது வீட்டை தேர்ந்தெடுக்க நந்தம்பாக்கத்தில் குவிந்த மக்கள்
/
'கிரெடாய் சென்னை பேர்புரோ' கண்காட்சி துவக்கம் புது வீட்டை தேர்ந்தெடுக்க நந்தம்பாக்கத்தில் குவிந்த மக்கள்
'கிரெடாய் சென்னை பேர்புரோ' கண்காட்சி துவக்கம் புது வீட்டை தேர்ந்தெடுக்க நந்தம்பாக்கத்தில் குவிந்த மக்கள்
'கிரெடாய் சென்னை பேர்புரோ' கண்காட்சி துவக்கம் புது வீட்டை தேர்ந்தெடுக்க நந்தம்பாக்கத்தில் குவிந்த மக்கள்
ADDED : மார் 09, 2024 12:17 AM

சென்னை,
புதிதாக வீடு வாங்க விரும்புவோருக்காக, 'கிரெடாய்' சார்பில் 'பேர் புரோ - 2024' என்ற கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது. இதில், 'கிரெடாய்' எனும் இந்திய ரியல் எஸ்டேட் சங்க மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில், ஆண்டுதோறும் 'பேர் புரோ' என்ற பெயரில் வீட்டுவசதி கண்காட்சி நடத்தப்படுகிறது.
அந்த வகையில், 16வது ஆண்டாக, 'பேர் புரோ - 2024' வீட்டுவசதி கண்காட்சி, நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நேற்று துவங்கியது.
இந்த கண்காட்சியை, பேர் புரோ விளம்பர துாதர்களான நடிகையர் சுஹாசினி, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில், கிரெடாய் சென்னை பிரிவின் தலைவர் எஸ்.சிவகுருநாதன், தேசிய துணை தவைலவர் ஸ்ரீதரன், பாரத ஸ்டேட் வங்கி தலைமை பொது மேலாளர் ரவி ரஞ்சன் ஆகியோர் பங்கேற்றனர்.
இன்றும், நாளையும் நடக்கும் இக்கண்காட்சியில், 3.25 கோடி சதுர அடி பரப்பளவுக்கான குடியிருப்புகள், 2.5 லட்சம் சதுர அடி பரப்பளவுக்கான வணிக இடங்கள், 325 ஏக்கர் பரப்பளவுக்கான மனைகள் குறித்த விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கிரெடாய் அமைப்பின் உறுப்பினர்களான, 75க்கும் மேற்பட்ட நிறுவனங்களின், 200க்கும் மேற்பட்ட திட்டங்களின் விபரங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
இங்கு, 15 லட்ச ரூபாய் முதல், 15 கோடி ரூபாய் வரையிலான மதிப்புகளில் வீடு, மனைகள் விற்பனைக்கு கிடைக்கும். மேலும், பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள், நிதி நிறுவனங்கள் சார்பில் உடனடி வீட்டுக்கடன் வழங்குவதற்கான அரங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
தேடலுக்கு விடை
சென்னை அல்லது கோவையில் வீடு வாங்க வேண்டும் என திட்டமிட்டோம். சென்னை வந்திருந்த நிலையில், இக்கண்காட்சி குறித்து அறிந்து உடனே நேரில் வந்தோம். அனைத்து கட்டுமான நிறுவனங்களின் அரங்குகளும், ஒரே இடத்தில் இருப்பதால் புதிய வீட்டிற்கான விபரங்களை பெறுவது எளிதாகி உள்ளது. எங்கள் வீடு தேடலுக்கு, இங்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
- நந்தினி,
ஈரோடு
அதிக விபரங்கள்
சென்னையில் தனி வீடு அல்லது நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறோம். அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களுக்கு இணையாக, தனி வீடுகள், மனைகள் தொடர்பான திட்ட விபரங்கள், இங்கு அதிக அளவில் கிடைக்கின்றன. எவ்வளவு சந்தேகங்கள் கேட்டாலும், பிரதிநிதிகள் பொறுமையாக விளக்கம் அளித்தனர்.
- எஸ்.மணிகண்டன், தேனாம்பேட்டை.
அர்த்தமுள்ள உறவு
பொது மக்கள் தங்களுக்கான தனி வீடுகள், வில்லா மனைகள், அடுக்குமாடி குடியிருப்புகளை ஒரே இடத்தில் தேர்வு செய்ய இக்கண்காட்சியால், வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வீடு வாங்குவோருக்கும், விற்கும் நிறுவனங்களுக்கும் இடையே, அர்த்தமுள்ள உறவு ஏற்படுத்த, இக்கண்காட்சி பேருதவியாக இருக்கும்.
- எஸ்.சிவகுருநாதன்,
தலைவர், கிரெடாய் சென்னை பிரிவு.
50,000 பேர்
கடந்தாண்டு கண்காட்சி யில், வீடு வாங்குவாதற் காக 312 முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் வாயிலாக, 260 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்தாண்டு, 40,000 பேர் இக்கண்காட்சிக்கு வருகை தந்த நிலையில், தற்போது, 50,000க்கு மேற்பட்டோர் வருவர் என எதிர்பார்க்கிறோம்.
- அஸ்லம் பக்கீர் முகமது,
கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்.
புது திட்டங்கள்!
தாம்பரம் அல்லது அதை ஒட்டிய பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் வீடு வாங்க இருக்கிறோம். இங்கு ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் அனைத்து புது திட்டங்கள் குறித்த விபரங்களையும் தெளிவாக விளக்கு கின்றன. ஒரே இடத்தில் அதிக தகவல்கள் கிடைப்பது மகிழ்ச்சி.
- கார்க்திக்,பெசன்ட் நகர்.

