sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோவை மாணவி பாலியல் குற்றவாளிகள் மூவரை சுட்டுப்பிடித்த போலீசார்!

/

கோவை மாணவி பாலியல் குற்றவாளிகள் மூவரை சுட்டுப்பிடித்த போலீசார்!

கோவை மாணவி பாலியல் குற்றவாளிகள் மூவரை சுட்டுப்பிடித்த போலீசார்!

கோவை மாணவி பாலியல் குற்றவாளிகள் மூவரை சுட்டுப்பிடித்த போலீசார்!

200


UPDATED : நவ 05, 2025 04:50 PM

ADDED : நவ 04, 2025 02:31 AM

Google News

200

UPDATED : நவ 05, 2025 04:50 PM ADDED : நவ 04, 2025 02:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவையில் ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த கல்லுாரி மாணவியை, கத்தி முனையில் கடத்தி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மூவரை கோவை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

இது குறித்த விபரம் வருமாறு:

மதுரையைச் சேர்ந்த 20 வயது மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது ஆண் நண்பர், கோவை ஒண்டிபுதுாரைச் சேர்ந்த 25 வயது இளைஞர்; மெக்கானிக் மற்றும் பைக் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

கண்ணாடி உடைப்பு

நேற்று முன்தினம் (நவ.,02) இரவு 11:00 மணிக்கு இருவரும் காரில் கோவை விமான நிலையத்தின் பின்புறம் பிருந்தாவன் நகர் பகுதிக்கு சென்று, அப்பகுதியில் உள்ள காலி மைதானத்தில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு போதையில் வந்த மூவர், கார் கதவை தட்டி, இருவரையும் வெளியே வருமாறு அழைத்தனர். அச்சமடைந்த இருவரும், வெளியே வர மறுத்தனர். இதையடுத்து, மூவரில் ஒருவர் காரின் முன்பக்க கண்ணாடியை அரிவாளால் அடித்து உடைத்தனர்.

தொடர்ந்து, காரின் கதவு கண்ணாடியை உடைத்தனர். பின், காரில் இருந்த இளைஞரை கடுமையாக தாக்கி, அரிவாளால் வெட்டினர். அதில், அவருக்கு தலை மற்றும் காதின் அருகே காயம் ஏற்பட்டதை அடுத்து, மயங்கி விழுந்தார்.

இதையடுத்து, மூன்று மர்ம நபர்களும் மாணவியை ஒன்றரை கி.மீ., துாரம் இழுத்துச் சென்று, மறைவான இடத்தில் வைத்து, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அடுத்தடுத்து மூவரும் பலாத்காரம் செய்ததால், தாக்குப்பிடிக்க முடியாமல் மாணவி மயங்கினார். நள்ளிரவில் அவரை அப்படியே விட்டு, மூவரும் அங்கிருந்து தப்பினர்.

நினைவு திரும்பியது


மயக்கமடைந்த வாலிபருக்கு அதிகாலை 3:00 மணிக்கு நினைவு திரும்பியது. அவர், காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து நடந்த விபரத்தை தெரிவித்தார். உடனடியாக பீளமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

வாலிபர் அளித்த தகவலில், மாணவியை அப்பகுதி முழுதும் போலீசார் தேடினர். இரண்டு மணி நேர தேடலுக்கு பின், கார் நின்றிருந்த இடத்தில் இருந்து ஒன்றரை கி.மீ.,க்கு அப்பால், மாணவி ஆடையின்றி மயங்கிய நிலையில் கிடந்தார்.

தனிப்படைகள் அமைப்பு

அவரை மீட்ட போலீசார், தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரித்து வந்தனர்.

இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க, கோவை மாநகர போலீஸ் வடக்கு துணை கமிஷனர் தேவநாதன் தலைமையில், ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

நள்ளிரவில் மாணவியின் கதறல்

காரில் இருந்த இளைஞரை அரிவாளால் வெட்டியதால் அவர் மயக்கமடைந்தார். அதன்பின் மாணவியை மர்ம நபர்கள் இழுத்து சென்றுள்ளனர். அப்போது மாணவி, 'காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்' என, கதறி சத்தமிட்டுள்ளார்.

மாணவியின் கதறல், அருகில் உள்ள சிலருக்கு கேட்டுள்ளது; அவர்கள் சென்று பார்த்த போது, இருட்டில் அங்கு யாரும் இல்லை. அதற்குள் மூவரும் மாணவியை மறைவான இடத்துக்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச்சென்றனர்.

குற்றவாளிகள் சுட்டுப்பிடிப்பு

இந்நிலையில் கோவை போலீசார் குற்றவாளிகளை தேடி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த குணா (எ) தவசி(28), சதீஷ் (எ)கருப்பசாமி(29), கார்த்திக் (எ) காளீஸ்வரன்(27) என்பது தெரியவந்தது.

தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் மூன்று பேரை போலீசார் பிடிக்கச் சென்ற பொழுது அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் தலைமை காவலருக்கு இடதுகை மணிக்கட்டில் வெட்டு விழுந்துள்ளது.தொடர்ந்து காவலரை வெட்டிவிட்டு தப்பி ஓடிய மூன்று பேர் மீதும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜுன் மற்றும் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் தப்பி ஓடிய குற்றவாளிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய இருவருக்கும் இரண்டு கால்களிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. குணா என்பவருக்கு ஒரு காலில் மட்டும் குண்டு பாய்ந்தது.

காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் 3 பேரையும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார் அரிவாளால் வெட்டப்பட்டதில் இடது கை மணிக்கட்டில் காயமடைந்த தலைமை காவலர் சந்திரசேகரையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் குற்றவாளிகள் மூன்று பேரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இருகூர் பகுதியில் வீடு எடுத்து கட்டிட வேலை பார்த்து வருவதும் தெரியவந்துள்ளது.

அதில் கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய இருவரும் சகோதரர்கள் என்பதும்,இவர்கள் 3 பேர் மீதும் ஒரு கொலை வழக்கு,வழிப்பறி மற்றும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்த 3 பேரும் நள்ளிரவு நேரத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோதனை

கோவை வெள்ளகிணறு துடியலூர் ரோட்டில் துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் தடய அறிவியல் துறை நிபுணர்கள் ஆய்வு நடத்தினர்.








      Dinamalar
      Follow us