/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடர்ந்து வளர்ந்த ஆகாய தாமரை கால்வாய் நீரோட்டம் பாதிப்பு
/
அடர்ந்து வளர்ந்த ஆகாய தாமரை கால்வாய் நீரோட்டம் பாதிப்பு
அடர்ந்து வளர்ந்த ஆகாய தாமரை கால்வாய் நீரோட்டம் பாதிப்பு
அடர்ந்து வளர்ந்த ஆகாய தாமரை கால்வாய் நீரோட்டம் பாதிப்பு
ADDED : ஏப் 25, 2024 12:46 AM

வியாசர்பாடி, வியாசர்பாடி, சாஸ்திரி நகர் கால்வாயில் அடர்ந்து வளர்ந்த ஆகாயத்தாமரை மற்றும் குப்பை கழிவுகளால், நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
வியாசர்பாடி, சாஸ்திரி நகரில் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயை சுற்றி ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. கால்வாயை அப்பகுதி மக்கள் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்துகின்றனர். அதேபோல, அடர்ந்து வளர்ந்துள்ள ஆகாய தாமரையால் கால்வாயில் நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. கோடை வெயில் ஒருபக்கம் மறுபக்கம் கொசு தொல்லை என, மக்கள் துாக்கம் தொலைத்துள்ளனர். குழந்தைகள் மர்ம காய்ச்சலுக்கு ஆளாகின்றனர்.
எனவே, கால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.