/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எல்லையம்மன் கோவிலை அகற்ற எடையாளம் கிராமத்தினர் எதிர்ப்பு
/
எல்லையம்மன் கோவிலை அகற்ற எடையாளம் கிராமத்தினர் எதிர்ப்பு
எல்லையம்மன் கோவிலை அகற்ற எடையாளம் கிராமத்தினர் எதிர்ப்பு
எல்லையம்மன் கோவிலை அகற்ற எடையாளம் கிராமத்தினர் எதிர்ப்பு
ADDED : டிச 23, 2025 05:48 AM

செங்கல்பட்டு: எடையாளம் கிராமத்தில் உள்ள எல்லையம்மன் கோவிலை அகற்ற, கிராமவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து, எடையாளம் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் மற்றும் கிராம மக்கள், கலெக்டர் சினேகாவிடம், நேற்று அளித்த மனு:
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அடுத்த எடையாளம் ஊராட்சியில், ஏரிக்கரை அருகில், நீர்நிலைக்கு பாதிப்பு இல்லாத இடத்தில் உள்ள எல்லையம்மன் சுவாமியை, கிராம தேவதையாக பல ஆண்டுகளாக வழிபட்டு வருகிறோம்.
'இக்கோவில் நீர் நிலையில் உள்ளதால் அகற்றப்படும்' என, அச்சிறுபாக்கம் நீர்வளத்துறை உதவி பொறியாளர், நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இதில், 21 நாட்களுக்குள், பெரிய ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் அகற்றப்படும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோவில் இல் லாத ஊரில் நாங்கள் வாழ்வதற்கும், வசிப்பதற்கும் விரும்பம் இல்லை. இதனால், கிராமத்தில் உள்ள அனைவரின் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை போன்ற குடியுரிமையை தங்களிடமே ஒப்படைத்து விடுகிறோம். கலெக்டர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இம்மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் சினேகா, விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

