/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விபத்தில் சிக்கிய ஓட்டுநருக்கு இழப்பீடு கோரி மக்கள் போராட்டம்
/
விபத்தில் சிக்கிய ஓட்டுநருக்கு இழப்பீடு கோரி மக்கள் போராட்டம்
விபத்தில் சிக்கிய ஓட்டுநருக்கு இழப்பீடு கோரி மக்கள் போராட்டம்
விபத்தில் சிக்கிய ஓட்டுநருக்கு இழப்பீடு கோரி மக்கள் போராட்டம்
ADDED : டிச 23, 2025 05:49 AM

சித்தாமூர்: தொன்னாடு கிராமத்தில், கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் காலை இழந்த ஓட்டுநருக்கு இழப்பீடு கோரி, கிராம மக்கள் நேற்று கல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சித்தாமூர் அடுத்த முதுகரை கிராமம், கண்ணகி தெருவைச் சேர்ந்தவர் மகேஷ்வரன், 29. இவரது மனைவி நந்தினி, 27. தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
மகேஷ்வரன் சித்தாமூர் அடுத்த தொன்னாடு கிராமத்தில் உள்ள ஆலயம் தனியார் கல்குவாரியில், கடந்த 4 ஆண்டுகளாக ஹிட்டாச்சி ஆப்பரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த அக்., 31ம் தேதி வேலை செய்த போது, ஹிட்டாச்சி இயந்திரத்தின் பக்கெட் மோதி பலத்த காயமடைந்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கால் பகுதிக்கு செல்லும் நரம்புகள் செயலிழந்ததால், காட்டாங்கொளத்துார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன், கால் முழுதும் அகற்றப்பட்டது.
இந்நிலையில், விபத்தில் காலை இழந்த மகேஷ்வரன் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரி, பொதுமக்கள் நேற்று காலை 10:30 மணியளவில், கல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலின்படி வந்த சித்தாமூர் போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தி, நஷ்ட ஈடு வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினர். இதை யடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

