/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஏரி காத்த ராமர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
/
ஏரி காத்த ராமர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : ஆக 22, 2025 01:45 AM

மதுராந்தகம்:மதுராந்தகத்தில், ஏரி காத்த ராமர் கோவில் கும்பாபிேஷகம், விமரிசையாக நடந்தது.
மதுராந்தகத்தில், ஏரி காத்த ராமர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த, 2 ஆண்டுகளுக்கு முன் பாலாலயம் செய்யப்பட்டு, பணிகள் துவங்கின.
உபயதாரர்கள் நிதியின் வாயிலாக, திருக்கோவிலில் சன்னிதிகள், விமானங்கள், கொடிமரம், ராஜகோபுரம் புனரமைக்கப்பட்டு, ஜீர்ணோத்தாரண மஹா ஸம்ப்ரோக்ஷ்ணம், நேற்று காலை 8:00 மணிக்கு மேல் 9:30 மணிக்குள்ளாக கன்யா லக்னத்தில், மஹா கும்பாபிேஷகம் நடந்தது.
பக்தர்கள் அனைவருக்கும், பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில், செங்கல்பட்டு ஹிந்து சமய அறநிலைத்துறை உதவி கமிஷனர் ராஜலட்சுமி, காஞ்சிபுரம் ஹிந்து சமய அறநிலையத் துறை இணை கமிஷனர் குமாரதுரை, மதுராந்தகம் கோவில் செயல் அலுவலர் மேகவண்ணன் மற்றும் அறங்காவலர் குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
மாலை 6:00 மணிக்கு பெரிய பெருமாள் திருவீதி புறப்பாடு நடைபெற்றது.
இன்று முதல் 48 நாள் மண்டல பூஜைகள் நடைபெறும்.