/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஏரிக்கரை குறுக்கே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து அபாயம்
/
ஏரிக்கரை குறுக்கே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து அபாயம்
ஏரிக்கரை குறுக்கே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து அபாயம்
ஏரிக்கரை குறுக்கே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து அபாயம்
ADDED : ஆக 22, 2025 01:44 AM

திருப்போரூர்:மயிலை கிராமத்தில், ஏரிக்கரையின் குறுக்கே, மின்கம்பிகள் தாழ்வாகச் செல்வதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்போரூர் ஒன்றியம், மயிலை கிராமத்தில், தாங்கல் ஏரி உள்ளது.
இந்த ஏரிக்கரையின் குறுக்கே, ஆட்கள் நடந்தால் மார்பில் படும் அளவிற்கு, மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன.
மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லையென, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, மயிலை கிராமத்தினர் கூறியதாவது:
இந்த வழியாக விவசாயிகள், ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வோர், மின் கம்பிகள் தாழ்வாக உள்ளதால் உயிர் பயத்தில் செல்கின்றனர். இதன் காரணமாக, ஏரிக்கரை சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
'குடி'மகன்கள் அதிகமானோர் இந்த வழியாகச் செல்கின்றனர். இவர்கள், மது போதையில் தெரியாமல், மின்கம்பியில் சிக்கும் சூழல் உள்ளது.
இந்த மின்வடங்களை மாற்றியமைக்க, மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை.
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, ஆபத்தான நிலையிலுள்ள இந்த மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.