/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரயில் நிலையத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற கோரிக்கை
/
ரயில் நிலையத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற கோரிக்கை
ரயில் நிலையத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற கோரிக்கை
ரயில் நிலையத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற கோரிக்கை
ADDED : அக் 23, 2025 10:28 PM

மறைமலை நகர்:ரெட்டிபாளையம் ரயில் நிலைய நடைமேடை அருகே முளைத்துள்ள செடிகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் ரயில் தடத்தில், ரெட்டிபாளையம் ரயில் நிலையம் உள்ளது.
திருமால்பூரில் இருந்து செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில்களும், காஞ்சிபுரம், அரக்கோணம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களும், இந்த நிலையத்தில் தினமும் நின்று செல்லும்.
இந்த ரயில் நிலையத்தை ஆத்துார், வடபாதி, தென்பாதி, பழத்தோட்டம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பயணியர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ரயில் நிலையத்தில் அதிக அளவில் செடிகள் வளர்ந்துள்ளதுடன், பயணியருக்கு நிழற்கூரையும் இல்லாததால், அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து, ரயில் பயணியர் கூறியதாவது:
தினமும் இந்த ரயில் நிலையத்தில் இருந்து கிண்டி, தாம்பரம், மறைமலைநகர், ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற் சாலை மற்றும் அலுவலகங்களுக்கு, நுாற்றுக்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.
அதே போல செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கும் பயணியர் சென்று வருகின்றனர். ஆனால் இந்த ரயில் நிலைய வளாகத்தில், மின்விளக்கு குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை.
பயணியருக்கான நிழற்குடையில் கூரை இல்லாததால் மழை மற்றும் வெயில் காலங்களில், பயணியர் அவதிப்படுகின்றனர்.
ரயில் நிலைய நடைபாதை முழுதும் அதிக அளவில் செடிகள் வளர்ந்துள்ளதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
அத்துடன், நடைமேடையில் பல இடங்களில் இருக்கைகள் உடைந்துள்ளன. எனவே, ரெட்டிபாளையம் ரயில் நிலைய நடைமேடை அருகே முளைத்துள்ள செடிகளை அகற்றி சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

