/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நாவலுார் அரசு பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு
/
நாவலுார் அரசு பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு
ADDED : அக் 23, 2025 10:29 PM

திருப்போரூர்:திருப்போரூர் அருகே நாவலுார் அரசு பள்ளியில், புதிய கட்டடம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
திருப்போரூர் ஒன்றியம், நாவலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 400க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால், சமீபத்தில் 76 லட்சம் ரூபாய் மதிப்பில், நான்கு வகுப்பறைகள் புதிதாக கட்டப்பட்டன.
புதிய வகுப்பறை கட்டடத்தின் திறப்பு விழா, நேற்று நடந்தது.
இதில், ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் தலைமை வகித்தார். நாவலுார் ஊராட்சி தலைவர் மகாலட்சுமி முன்னிலை வகித்தார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், கட்டடத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, 43.89 லட்சம் ரூபாய் மதிப்பிலான, குப்பை சேகரிக்கும் புதிய வாகனத்தை, அமைச்சர் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
விழாவில், மாவட்ட கலெக்டர் சினேகா, காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், திருப்போரூர் தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலர் பையனுார் சேகர், நாவலுார் ஊராட்சி செயலர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

