/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருமுக்காட்டில் பனை விதை நடும் விழா
/
திருமுக்காட்டில் பனை விதை நடும் விழா
ADDED : டிச 14, 2025 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அச்சிறுபா: க்கம்: அச்சிறுபாக்கம் அடுத்த திருமுக்காட்டில், பனை விதை நடும் விழா நடந்தது.
அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டு, திருமுக்காடு ஊராட்சி உள்ளது.
இங்கு, ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் ஏற்பாட்டில், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தலைவர் பிரவீன் குமார் தலைமையில், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பனை விதை நடும் விழாவை துவக்கி வைத்தார்.
இதில், பா.ஜ.,வினர் மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து, திருமுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிக்கரை மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில், 2,000க்கும் மேற்பட்ட பனை விதைகளை நடவு செய்தனர்.

