/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
169 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை
/
169 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை
ADDED : டிச 14, 2025 06:14 AM

மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி பொறியியல் கல்லுாரியில், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், 169 மாணவர்களுக்கு, பணி ஆணை வழங்கப்பட்டது.
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி பொறியியல் கல்லுாரியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி, கல்லுாரி தாளாளர் செந்தில்குமார் தலைமையில், கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.
டீன் ராமசாமி, கல்லுாரி முதல்வர் ராஜா, துணை முதல்வர் புவனேஸ்வரி, நிர்வாக அலுவலர் சதாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலைவாய்ப்புத்துறை தலைவர் மற்றும் முதுநிலை கணினி பயன்பாட்டியல் துணை தலைவர் அருண்குமார் வரவேற்றார். மின்னணுவியல் துறை உதவி பேராசிரியர் தமிழரசி நன்றி கூறினார்.

