/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
1,000 கிலோ குட்காவுடன் விபத்தில் சிக்கியது கார் கடத்தல்காரர்கள் ஓட்டம்
/
1,000 கிலோ குட்காவுடன் விபத்தில் சிக்கியது கார் கடத்தல்காரர்கள் ஓட்டம்
1,000 கிலோ குட்காவுடன் விபத்தில் சிக்கியது கார் கடத்தல்காரர்கள் ஓட்டம்
1,000 கிலோ குட்காவுடன் விபத்தில் சிக்கியது கார் கடத்தல்காரர்கள் ஓட்டம்
ADDED : ஏப் 04, 2024 10:26 PM

சோழவரம்:சோழவரம் அருகே உள்ள மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையில் உள்ள விஜயநல்லுார் பகுதியில், நேற்று காலை, 11:00 மணிக்கு செங்குன்றம் போக்குவரத்துபுலனாய்வு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சோழவரத்தில் இருந்து வண்டலுார் நோக்கி சென்ற குஜராத் மாநில பதிவு எண் கொண்ட, 'ஸ்விப்ட்' காரை நிறுத்துவதற்காக கை காட்டினர்.
போலீசாரை கண்ட அந்த கார் வேகமாக சென்று, அங்கிருந்த 'மீடியனில்' மோதி நின்றது. பின் அதிலிருந்த மூன்று பேர், காரை விட்டு இறங்கி தப்பியோடினர். போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது, கால்வாய் பாலத்தில் இருந்து கீழே குதித்து தப்பினர்.
மீடியனில் மோதி விபத்துக்குள்ளான காரை கிரேன் உதவியுடன் போலீசார் மீட்டு, சோதனை செய்தபோது, அதில், மூட்டை மூட்டையாய் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1,000 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் இருப்பது தெரிந்தது.
இது குறித்து சோழவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. செங்குன்றம் துணை கமிஷனர் பாலகிருஷணன், உதவி கமிஷனர் ராஜாராபர்ட் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து குட்கா மற்றும் கடத்தி வந்த காரை பறிமுதல் செய்தனர்.
குட்கா புகையிலை பொருட்கள் வெளிமாநிலத்தில் இருந்து சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை வழியாககடத்தி வரப்பட்டு, தென்மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருக்கலாம் என, போலீசார்தெரிவித்தனர். தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

