/
செய்திகள்
/
விளையாட்டு
/
டென்னிஸ்
/
யு.எஸ்., ஓபன் டென்னிஸ்: மூன்றாவது சுற்றில் ரடுகானு
/
யு.எஸ்., ஓபன் டென்னிஸ்: மூன்றாவது சுற்றில் ரடுகானு
யு.எஸ்., ஓபன் டென்னிஸ்: மூன்றாவது சுற்றில் ரடுகானு
யு.எஸ்., ஓபன் டென்னிஸ்: மூன்றாவது சுற்றில் ரடுகானு
ADDED : ஆக 27, 2025 10:22 PM

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் பிரிட்டன் வீராங்கனை ரடுகானு வெற்றி பெற்றார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில், யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் பிரிட்டனின் எம்மா ரடுகானு, இந்தோனேஷியாவின் ஜானிஸ் டிஜென் மோதினர். அபாரமாக ஆடிய ரடுகானு 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு 2வது சுற்றில் அமெரிக்காவின் எம்மா நவரோ 6-2, 6-1 என சகவீராங்கனை கேட் மெக்னல்லியை வீழ்த்தினார்.
கோகோ காப் வெற்றி: முதல் சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ல்ஜனோவிக் மோதினர். முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றிய கோகோ காப், 'டை பிரேக்கர்' வரை சென்ற 2வது செட்டை 6-7 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் எழுச்சி கண்ட இவர், 7-5 என போராடி வென்றார். முடிவில் கோகோ காப் 6-4, 6-7, 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு முதல் சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் பெல்ஜியத்தின் கிரீட் மின்னெனை தோற்கடித்தார். மற்ற முதல் சுற்று போட்டிகளில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா, பிரேசிலின் பீட்ரிஸ் ஹட்டா மையா, சீனாவின் ஜின்யு வாங் வெற்றி பெற்றனர்.
சின்னர் வெற்றி: ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் 'நம்பர்-1' இத்தாலியின் ஜானிக் சின்னர், செக்குடியரசின் விட் கோப்ரிவா மோதினர். அபாரமாக ஆடிய சின்னர் 6-1, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு முதல் சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-2, 7-6, 6-4 என சிலியின் அலெஜான்ட்ரோ டபிலோவை வீழ்த்தினார். மற்ற முதல் சுற்று போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், இத்தாலியின் லோரென்சோ முசெட்டி, அமெரிக்காவின் டாமி பால், கனடாவின் ஷபோவலோவ், பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.