/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
மல்யுத்த சூப்பர் லீக் நடக்குமா...
/
மல்யுத்த சூப்பர் லீக் நடக்குமா...
UPDATED : செப் 17, 2024 11:20 PM
ADDED : செப் 17, 2024 05:20 PM

புதுடில்லி: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக் ஷி மாலிக், அமன் ஷெராவத் உள்ளிட்டோர் இணைந்து மல்யுத்த சாம்பியன்ஸ் சூப்பர் லீக் தொடர் துவக்க உள்ளனர்.
ஐ.பி.எல்., கிரிக்கெட், ஐ.எஸ்.எல்., கால்பந்து, அல்டிமேட் டேபிள் டென்னிஸ் பாணியில் வளரும் மல்யுத்த நட்சத்திரங்களுக்கு கைகொடுக்கும் வகையில் சாம்பியன்ஸ் சூப்பர் லீக் தொடர் வரவுள்ளது.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற அமன் ஷெராவத் (2024ல் வெண்கலம்), சாக் ஷி மாலிக் (2016ல் வெண்கலம்), 2021 காமன்வெல்த் விளையாட்டில் வெண்கலம் கைப்பற்றிய கீதா போகத் இணைந்து இத்தொடரை விரைவில் துவக்க உள்ளனர்.
இதுகுறித்து கீதா போகத் கூறியது:
சாக் ஷியும் நானும் இணைந்து சாம்பியன்ஸ் சூப்பர் லீக் தொடர் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பிடம் (டபிள்யு.எப்.ஐ.,) பேசவில்லை. ஒருவேளை அரசு, டபிள்யு.எப்.ஐ., அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும். வீரர், வீராங்கனைகளால் மட்டும் நடத்தப்படும் முதல் தொடர் இதுவாக இருக்கும்,'' என்றார்.
அனுமதி கிடைக்குமா
டபிள்யு.எப்.ஐ., தலைவர் சஞ்சய் சிங் கூறுகையில், ''மல்யுத்த சூப்பர் லீக் தொடருக்கு நாங்கள் அனுமதி தரமாட்டோம். ஏற்கனவே நிறுத்தப்பட்ட புரோ மல்யுத்த தொடரை மீண்டும் நடத்த முயற்சி செய்வோம்,'' என்றார்.

