/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
இளம் இந்தியா கோல் மழை: தெற்காசிய கால்பந்தில் அபாரம்
/
இளம் இந்தியா கோல் மழை: தெற்காசிய கால்பந்தில் அபாரம்
இளம் இந்தியா கோல் மழை: தெற்காசிய கால்பந்தில் அபாரம்
இளம் இந்தியா கோல் மழை: தெற்காசிய கால்பந்தில் அபாரம்
ADDED : ஆக 24, 2025 11:01 PM

திம்பு: தெற்காசிய கால்பந்தில் கோல் மழை பொழிந்த இளம் இந்திய பெண்கள் அணி 8-0 என, பூடானை வீழ்த்தியது.
பூடானில், 17 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 7வது சீசன் நடக்கிறது. இதில் இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடான் என 4 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி, கோப்பை வெல்லும்.
லீக் போட்டியில் இந்தியா, பூடான் அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய வீராங்கனைகள் கோல் மழை பொழிந்தனர். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 8-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் அனுஷ்கா குமாரி 'ஹாட்ரிக்' கோல் (53, 61, 72வது நிமிடம்) அடித்தார். அபிஷ்தா 2 (23, 88 வது நிமிடம்), பியர்ல் (71வது), திவ்யானி லிண்டா (77 வது), வாலைனா (90+2வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.
முதலிரண்டு போட்டியில் நேபாளம், வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா, தொடர்ச்சியாக 3வது வெற்றியை பதிவு செய்தது. வரும் ஆக. 27ல் நடக்கவுள்ள போட்டியில் இந்திய அணி, பூடானை மீண்டும் சந்திக்கிறது.