sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

கால்பந்து

/

தெற்காசிய கால்பந்து: இந்தியா ஏமாற்றம்: வங்கதேச அணியிடம் வீழ்ந்தது

/

தெற்காசிய கால்பந்து: இந்தியா ஏமாற்றம்: வங்கதேச அணியிடம் வீழ்ந்தது

தெற்காசிய கால்பந்து: இந்தியா ஏமாற்றம்: வங்கதேச அணியிடம் வீழ்ந்தது

தெற்காசிய கால்பந்து: இந்தியா ஏமாற்றம்: வங்கதேச அணியிடம் வீழ்ந்தது


ADDED : ஆக 31, 2025 10:20 PM

Google News

ADDED : ஆக 31, 2025 10:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திம்பு: தெற்காசிய கால்பந்து (17 வயது) போட்டியில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி, வங்கதேசத்திடம் தோல்வியடைந்தது.

பூடானில், 17 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 7வது சீசன் நடந்தது. இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடான் என 4 அணிகள், 'டபுள் ரவுண்டு ராபின்' முறையில் விளையாடின. முதல் 5 போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி (15 புள்ளி), ஏற்கனவே சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது.

கடைசி லீக் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மீண்டும் மோதின. முதல் பாதி முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கி இருந்தது. பின் இந்திய வீராங்கனைகள் எழுச்சி பெற, ஒருகட்டத்தில் போட்டி 3-3 என சமநிலையில் இருந்தது. 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் வங்கதேசம் சார்பில் ஒரு கோல் பதிவானது.

ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3-4 என அதிர்ச்சி தோல்வியடைந்தது. முடிவில் 6 போட்டியில் (5 வெற்றி, ஒரு தோல்வி), 15 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த இந்தியா, 3வது முறையாக (2018, 2019, 2025) கோப்பை வென்றது. வங்கதேச அணி 5வது முறையாக, 2வது இடம் பிடித்தது.






      Dinamalar
      Follow us