/
செய்திகள்
/
விளையாட்டு
/
கால்பந்து
/
நேஷன்ஸ் கோப்பை கால்பந்து: ஈரானிடம் வீழ்ந்தது இந்தியா
/
நேஷன்ஸ் கோப்பை கால்பந்து: ஈரானிடம் வீழ்ந்தது இந்தியா
நேஷன்ஸ் கோப்பை கால்பந்து: ஈரானிடம் வீழ்ந்தது இந்தியா
நேஷன்ஸ் கோப்பை கால்பந்து: ஈரானிடம் வீழ்ந்தது இந்தியா
ADDED : செப் 01, 2025 10:56 PM

ஹிசோர்: நேஷன்ஸ் கோப்பை கால்பந்து லீக் போட்டியில் இந்திய அணி, ஈரானிடம் தோல்வியடைந்தது.
தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தானில், மத்திய ஆசிய கால்பந்து சங்கம் (சி.ஏ.எப்.ஏ.,) சார்பில் 'நேஷன்ஸ்' கோப்பை 2வது சீசன் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் பைனலுக்கு முன்னேறும்.
'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில் தஜிகிஸ்தானை வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் 'பிபா' உலக தரவரிசையில் 133வது இடத்தில் உள்ள இந்திய அணி, 20வது இடத்தில் உள்ள வலிமையான ஈரானை எதிர்கொண்டது. இதில் ஏமாற்றிய இந்தியா, ஆட்டநேர முடிவில் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
இந்திய அணி, தனது கடைசி லீக் போட்டியில் (செப். 4) ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது.