/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
வருண் சக்ரவர்த்தி 'நம்பர்-1': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
/
வருண் சக்ரவர்த்தி 'நம்பர்-1': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
வருண் சக்ரவர்த்தி 'நம்பர்-1': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
வருண் சக்ரவர்த்தி 'நம்பர்-1': ஐ.சி.சி., தரவரிசையில் முன்னேற்றம்
ADDED : செப் 17, 2025 09:45 PM

துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார்.
சர்வதேச 'டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பவுலர் பட்டியலில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, 733 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருந்து முதன்முறையாக 'நம்பர்-1' இடத்தை கைப்பற்றினார். இதற்கு முன், கடந்த பிப்ரவரி மாதம் வெளியான தரவரிசையில் 2வது இடம் பிடித்திருந்தார். ஜஸ்பிரித் பும்ரா, ரவி பிஷ்னோய்க்கு பின், இப்பட்டியலில் 'நம்பர்-1' இடம் பிடித்த 3வது இந்திய பவுலரானார் வருண்.
நியூசிலாந்தின் ஜேக்கப் டபி (717 புள்ளி) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்ற இந்திய பவுலர்களான அக்சர் படேல் (12வது இடம், 655 புள்ளி), குல்தீப் யாதவ் (23வது இடம், 604 புள்ளி), பும்ரா (40வது இடம், 537 புள்ளி) முன்னேற்றம் கண்டனர்.
பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா (884) 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின் திலக் வர்மா (792 புள்ளி), சூர்யகுமார் யாதவ் (747) முறையே 4, 7வது இடத்துக்கு தள்ளப்பட்டனர். இந்திய துவக்க வீரர் சுப்மன் கில் (555), 39வது இடத்துக்கு முன்னேறினார்.
'ஆல்-ரவுண்டர்' பட்டியலில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா (237) முதலிடத்தில் தொடர்கிறார்.