/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
அரைசதம் விளாசினார் ஜெகதீசன் * 532 ரன் குவித்த ஆஸி.,
/
அரைசதம் விளாசினார் ஜெகதீசன் * 532 ரன் குவித்த ஆஸி.,
அரைசதம் விளாசினார் ஜெகதீசன் * 532 ரன் குவித்த ஆஸி.,
அரைசதம் விளாசினார் ஜெகதீசன் * 532 ரன் குவித்த ஆஸி.,
ADDED : செப் 17, 2025 06:03 PM

லக்னோ: லக்னோ போட்டியில் இந்திய 'ஏ' அணி வீரர் ஜெகதீசன் அரைசதம் அடித்தார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய 'ஏ' அணி, அதிகாரப்பூர்வமற்ற இரண்டு டெஸ்ட் (தலா நான்கு நாள்) போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி லக்னோவில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 337/5 ரன் எடுத்திருந்தது. லியாம் ஸ்காட் (47), ஜோஷ் பிலிப் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.
பிலிப் சதம்
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ஸ்காட் 81 ரன்னில் அவுட்டானார். 26 ரன்னில் பிலிப் அடித்த பந்தை, விக்கெட் கீப்பர் ஜெகதீசன் நழுவவிட்டார். வாய்ப்பை பயன்படுத்திய பிலிப், 77 பந்தில் சதம் விளாசினார். இரண்டாவது நாளில் 25 ஓவரில் 195 ரன் குவித்த ஆஸ்திரேலிய 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 532/6 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. பிலிப் (123), சேவியர் (39) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஜெகதீசன் நம்பிக்கை
அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் (44), ஜெகதீசன் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. ஜெகதீசன் அரைசதம் அடித்தார். மழை காரணமாக இரண்டாவது நாள் ஆட்டம் முன்னதாக முடிவுக்கு வந்தது. இந்திய 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 116/1 ரன் எடுத்திருந்தது. ஜெகதீசன் (50), சாய் சுதர்சன் (20) அவுட்டாகாமல் இருந்தனர்.