/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
தீப்தி சர்மா 'நம்பர்-1' * ஐ.சி.சி., தரவரிசையில்...
/
தீப்தி சர்மா 'நம்பர்-1' * ஐ.சி.சி., தரவரிசையில்...
தீப்தி சர்மா 'நம்பர்-1' * ஐ.சி.சி., தரவரிசையில்...
தீப்தி சர்மா 'நம்பர்-1' * ஐ.சி.சி., தரவரிசையில்...
ADDED : டிச 23, 2025 11:33 PM

துபாய்: சர்வதேச 'டி-20' பவுலர் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா, முதன் முறையாக முதலிடம் பிடித்தார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், 'டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது.
இலங்கை அணிக்கு எதிரான முதல் 'டி-20'ல் ஒரு விக்கெட் சாய்த்தார் இந்தியாவின் தீப்தி சர்மா. இதையடுத்து 737 புள்ளியுடன் ஒரு இடம் முன்னேறிய தீப்தி, முதன் முறையாக 'டி-20' அரங்கின் 'நம்பர்-1' பவுலர் ஆனார்.
ஆஸ்திரேலியாவின் அனாபெல் (736) இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். 3 இடம் பின்தங்கிய இந்தியாவின் ரேணுகா (685), 14 வது இடத்தில் உள்ளார். ராதா (679) 15வது இடத்தில் நீடிக்கிறார்.
மற்ற இந்திய பவுலர்கள் அருந்ததி 36வது, ஸ்ரீசரணி 69 வது இடத்துக்கு முன்னேறினர்.
ஜெமிமா அபாரம்
இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் 69 ரன் எடுத்த இந்தியாவின் ஜெமிமா, 'டி-20' பேட்டர் வரிசையில், 5 இடம் முன்னேறி, 9 வது இடம் பிடித்தார். துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, 3வது இடத்தில் நீடிக்கிறார்.
மற்ற இந்திய பேட்டர்கள் ஷைபாலி 10 வது, ஹர்மன்பிரீத் கவுர் 15வது இடங்களில் உள்ளனர்.

