ADDED : டிச 23, 2025 11:39 PM

ஷிமோகா: இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் விஜய் மெர்ச்சன்ட் டிராபி (3 நாள், 16 வயதுக்கு உட்பட்டோர்) தொடர் நடத்தப்படுகிறது.
ஷிமோகாவில் உள்ள கர்நாடக கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று துவங்கிய போட்டியில் தமிழகம், உ.பி., அணிகள் மோதுகின்றன. 'டாஸ்' வென்ற உ.பி., அணி பீல்டிங் தேர்வு செய்தது.
தமிழக அணிக்கு தன்வந்த் (18), ரிஷாப் ஸ்ரீராம் ஜோடி சுமார் துவக்கம் தந்தது. ரோகித் (0), தஷ்வின் (2) ஏமாற்றினர். ஆர்யா கணேஷ் 17 ரன் எடுக்க, ஸ்ரீராம் 48 ரன்னில் அவுட்டானார். புகழ் விஷ்ணு 25 ரன் எடுத்தார்.
கேப்டன் ஸ்ரீ தருண் 138 பந்தில் 100 ரன் எடுத்து அவுட்டானார். பின் வரிசையில் செல்லதுரை (23) சற்று கைகொடுத்தார். தமிழக அணி முதல் இன்னிங்சில் 269 ரன்னில் ஆல் அவுட்டானாது. உ.பி., சார்பில் ஆர்யன் 4, பிரித்விராஜ், கிருஷ்ணா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
பின் களமிறங்கிய உ.பி., அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 13/1 ரன் எடுத்திருந்தது.

