/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
பாட்மின்டன்: காலிறுதியில் தான்யா
/
பாட்மின்டன்: காலிறுதியில் தான்யா
ADDED : செப் 04, 2025 10:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஷென்ஜென்: சீனாவில் சர்வதேச மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இரண்டாவது சுற்றில் இந்தியாவின் தான்யா ஹேம்நாத், தைவானின் யு வெய் ஹுவாங்கை எதிர்கொண்டார்.
முதல் செட்டில் தான்யா 11-12 என பின்தங்கினார். அடுத்து தான்யா, தொடர்ந்து 10 புள்ளி எடுக்க, முதல் செட்டை 21-12 என வசப்படுத்தினார்.
இரண்டாவது செட்டிலும் 5-10 என பின்தங்கிய தான்யா, பின் எழுச்சி பெற்று 21-18 என கைப்பற்றினார். முடிவில் தான்யா 21-12, 21-18 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.