/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு
/
குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு
ADDED : டிச 30, 2025 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கோவில் குளத்தில் மீன்பிடித்த தொழிலாளி தவறி விழுந்து இறந்தார்.
காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை மகன் ராஜா, 29; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மதியம் பெரியகாலாப்பட்டு பகுதியில் உள்ள முருகன் கோவில் குளத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென குளத்தில் தவறி விழுந்து மூழ்கினார். தகவலறிந்து காலாப்பட்டு தீயணைப்பு நிலைய அதிகாரி ரமேஷ் தலைமையிலான வீரர்கள் ராஜாவை தேடினர்.
இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் ராஜாவை நேற்று மதியம் குளத்தில் இருந்து சடலமாக மீட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்த வருகின்றனர்.

