ADDED : செப் 17, 2025 11:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அகில இந்திய மகளிர் காங்., 41வது உதய தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் பாதயாத்திரை நடந்தது.
பாதயாத்திரைக்கு மகளிர் காங்., மாநில தலைவி நிஷா தலைமை தாங்கினார்.
காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம்., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், முன்னாள் துணை சபாநாயகர் பாலன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். புதுச்சேரி ராஜிவ் சிக்னலில் துவங்கிய ஊர்வலம், இந்திரா சிக்னலில் முடிவடைந்தது.