/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறந்தவர் யார்? : போலீசார் விசாரணை
/
இறந்தவர் யார்? : போலீசார் விசாரணை
ADDED : நவ 25, 2025 05:21 AM

பாகூர்: கிருமாம்பாக்கம் அடுத்த மதிக்கிருஷ்ணாபுரம் கருமாதி கொட்டகை அருகே கடந்த 17ம் தேதி, 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனை அனுப்பினர்.
அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இறந்தவர் காவி நிற வேட்டி அணிந்திருந்தார். அவரது இடது கையில் ஆங்கில எழுத்தில் ஆர். மணி என்று பச்சை குத்தி உள்ளது. இவரை பற்றிய தகவல் தெரிந்தால், 0413 - 2611143 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் என கிருமாம்பாக்கம் போலீசார் கேட்டுக் கொண்டனர்.

