ADDED : நவ 25, 2025 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக தொடர் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம், வாய்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. காரைக்கால் பகுதியில் விவசாய நிலங்களை தண்ணீர் சூழந்துள்ளது.
புயல், மழை எச்சரிக்கையால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. பள்ளி, கல்லுாரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. காரைக்காலில் நேற்று முன்தினம் காலை 8:30 முதல் நேற்று காலை 8:30 மணி வரை 7 செ.மீ., மழைபதிவானது.

