/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'படிக்கும் சூழலை ஏற்படுத்தி தர வேண்டும்; ' ஸ்பெக்ட்ரா அகாடமி கிளை மேலாளர் அரிஹரன் பேச்சு

ADDED : நவ 24, 2024 06:54 AM
'தினமலர்' மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கில் ஸ்பெக்ட்ரா அகாடமி கிளை மேலாளர் அரிஹரன் பேசியதாவது:
மருத்துவம், இன்ஜினியரிங் படிப்பதே பெரும்பாலான மாணவர்களின் இலக்காக உள்ளது. இதற்கு தயாராகும் மாணவர்களுக்குஅமைதியான படிக்கும் சூழலை ஏற்படுத்தி கொடுப்பது பெற்றோர் கடமை. நிறைய மதிப்பெண் எடுத்து சாதிக்க, பத்தாம் வகுப்பிற்கு பிறகு பிளஸ் 1 வகுப்பில் மாணவர்கள் நுழைகின்றனர். ஆனால் பிளஸ் 1 வகுப்பில் பாதிக்கு பிறகு தான் பாடத்திட்டம் புரிய ஆரம்பிக்கிறது. அதற்குள் அடுத்து பிளஸ் 2 வந்து விடுகிறது. இதனால் போட்டி தேர்வு தயாராக போதிய கால அவகாசம் மாணவர்களுக்கு இருப்பதில்லை.
இதேபோல் பிளஸ் 2 படிக்கும்போது தான் நீட், ஜே.இ.இ., தேர்விற்கான பாடத்திட்டத்தை புரிந்துகொள்கின்றனர். போட்டி தேர்வுக்கான அடிப்படை கல்வியை எங்கே தவறவிட்டோம் என்பதை அறிந்து கொள்கின்றனர்.
நீட் தேர்வுக்கான பாடத்திட்டம் புரிந்த பிறகு,தன்னம்பிக்கை பெற்று ரிப்பீட்டர்களாக மீண்டும் நீட் தேர்வு எழுதுகின்றனர். புதுச்சேரியில், கடந்த சில ஆண்டுகளாக ரிப்பீட்டர்கள் நீட் தேர்வு எழுதுவது குறைந்து வருகிறது.
ஆறாம் வகுப்பில் இருந்தே இப்போது போட்டி தேர்வுக்கான பவுண்டேஷன் கோர்ஸ் கற்க ஆரம்பித்துள்ளனர். இதற்கேற்ப நீட், ஜே.இ.இ., பவுண்டேஷன் கோர்ஸ்க்கு ஸ்பெக்ட்ரா நிறுவனம் சிறந்த பயிற்சியை அளித்து வருகின்றது. 2018ம் ஆண்டு முதல் இதுவரை 1,213 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., டாக்டர்களை உருவாக்கியுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.