/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் விரயம்
/
குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் விரயம்
ADDED : செப் 07, 2025 07:42 AM
புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் விரயமாகும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
புதுச்சேரி - கடலுார் சாலை, முருங்கப்பாக்கம் நான்கு முனை சந்திப்பு பகுதி வழியாக செல்லும் குடிநீர் குழாய் நேற்று இரவு 8:00 மணியளவில் உடைந்து சாலை முழுதும் தண்ணீர் ஓடியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பொதுப்பணித்துறை அமைச்சருக்கு தகவல் தெரிவித்தனர்.
அமைச்சர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உடனே செரிசெய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து சென்று குடிநீர் குழாயினை சரி செய்தனர். இதனிடையே குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் ஓடும் வீடியே சமூக வலை தளத்தில் வைரலானது.